Tuesday, November 29, 2016

ட்விட்டரில் ‘ட்ரென்டிங்’ என்றொரு ஐட்டம் இருக்கிறது.

யாரை பற்றிய தகவல் ட்ரென்ட்டிங் ஆகிறதோ, அவர்தான் அன்றைய நாளின் கிங்!

இந்திய ட்ரென்டுக்கே இப்படி என்றால், வேல்டு லெவல் ட்ரென்ட்டிங் என்றால் என்னாகும்? அப்படியாகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ்.ஆனால் அதற்காக சந்தோஷப்படதான் முடியாது. ஏன்? அவ்வளவும் திட்டு.

அசிங்கமான திட்டு! அஜீத் ரசிகர்களுக்கும் இவருக்கும் திடீரென முட்டிக் கொண்டது. பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஆத்திரப்பட்ட ஜி.வி.

அஜீத்தை ஆமை என்று கூறிவிட்டார். அவ்வளவுதான்... அசிங்கம் அசிங்கமாக ஹேஷ் டாக் உருவாக்கி, ஜி.வி.பிரகாஷின் குடும்பத்தையே இழுத்து நாறடித்துவிட்டார்கள் அஜீத் ரசிகர்கள்.

உலகம் முழுக்க இந்த திட்டுகள் அதிகம் வாசிக்கப்பட்டுவிட்டதால் வேல்டு ட்ரென்ட்டிங் ஆகிவிட்டது. இப்படி திட்டியவர்கள் வெறும் அஜீத் ரசிகர்கள் மட்டுமல்ல, தனுஷ் ரசிகர்களும் உள்ளே புகுந்து கொண்டார்கள்.

வேடிக்கை என்னவென்றால், இவர்களோடு சரிக்கு சரி நின்று சண்டை போடுவதற்காக ஆறு மணி நேரத்தை செலவிட்டார் ஜி.வி.பிரகாஷ். (இந்த நேரத்துல ஒரு பாட்டு கம்போஸ் பண்ணியிருந்தா உருப்படியான விஷயமா இருந்திருக்கும்ல?)

0 comments :

Post a Comment

 
Toggle Footer