தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைக் குறிப்பிடாமல், மாவீரர் தினத்தினை மக்கள் அனுஷ்டிக்க முடியும் என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், தேசிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
“உயிரிழந்த தமது சொந்தங்களை நினைவு கூர்ந்து நிகழ்வு நடாத்துவது மனித உரிமைகளில் ஒன்று. அதனை தடுக்க முடியாது. எனினும், இந்த மாவீரர் தின நிகழ்வுகளை அரசியல் நோக்கத்துடன் மேற்கொண்டிருந்தால் அது தவறானது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெற்கில் உயிரிழந்த தமது உறுப்பினர்களை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள மனோ கணேசன், “மக்கள் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்ட கட்சியல்ல. எனினும், வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம். வடக்கு மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்து நிகழ்வு நடத்த முடியாது.” என்றும் கூறியுள்ளார்.
Home
»
Sri Lanka
»
புலிகளின் பெயரைக் குறிப்பிடாமல் ‘மாவீரர் தினத்தை’ அனுஷ்டிக்க முடியும்: மனோ கணேசன்
Thursday, November 24, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment