ஹீரோக்களை முந்தும் காதநாயகிக்களுக்கான நடிகைகள் வித்யா பாலன், அனுஷ்கா போன்ற நடிகைகளின் வரிசையில், நடிகை நயனும் இடம்பிடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நம்ப முடியாதவை நடக்கின்றன. ஒரு நடிகை ஒரு படத்தின் வசூலை நிர்ணயிப்பது தமிழில் அரிதிலும் அரிது. இந்தியில் அப்படி நிகழ்ந்திருக்கிறது. வித்யா பாலனின் படங்கள் அவருக்காக மட்டுமே பார்க்கப்படுகின்றன. அதேபோல் கங்கனா ரனவத்தின் படங்கள். இவர்கள் நடிக்கும் நாயகி மையப் படங்கள் 60 முதல் 100 கோடிகள்வரை வசூலிக்கின்றன.
தென்னிந்தியாவில் அப்படியொரு நிலைமைக்கு ஆரம்பப்புள்ளி வைத்தவர், அனுஷ்கா. அவரது அருந்ததி தமிழ், தெலுங்கில் வசூலை அள்ளிச் சுருட்டியது. அனுஷ்காவை நம்பி ருத்ரமாதேவி போன்ற பிரமாண்ட படங்களை எடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்.இப்போது அந்த இடத்துக்கு வந்திருக்கிறார் நயன்தாரா. அவரது முதல் நாயகி மையப் படமான அனாமிகா சரியாகப் போகவில்லை. அந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என தெலுங்கு படங்களில் நடிக்க தெலுங்கு திரையுலகம் ஒரு வருடம் தடை விதித்தது.
அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தமிழில் தொடர்ந்து நடித்தார் நயன்தாரா. அவரது இரண்டாவது நாயகி மையப் படம், மாயா.ஹாரர் படமான இது நல்ல கலெக்ஷனை பெற்றது. மாயா வெளியான வருடத்தில் வெற்றி பெற்ற சில ஹாரர் படங்களில் அதுவும் ஒன்று. நயன்தாராவை நம்பி பல கோடிகள் முதலீடு செய்ய அப்போதுதான் தயாரிப்பாளர்கள் தயாராயினர்.
இப்போது இதுபோன்று வசூலை குவிக்கும் நாயகியை மையமாகக்கொண்ட பல படத்துக்கான கதைகளை கையில் வைத்துக்கொண்டு தயாரிப்பாளர்கள் நயனின் கால்ஷீட்டுக்கு காத்துள்ளனராம்.
Home
»
Cinema News
»
வித்யா பலன், அனுஷ்கா வரிசையில் கதையின் நாயகிக்கான இடத்தைப் பிடித்து வசூல் நாயகியான நயன்!
Thursday, November 24, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment