Saturday, November 26, 2016

கள்ள நோட்டு ஒழியுமா, கறுப்புப் பணம் ஒழியுமா என்கிற ஆராய்ச்சி எல்லாம் தேவை இல்லை என்று இயக்குனர் சமுத்திர கனி கூறியுள்ளார்.

அவர் மேலும் இதுக் குறித்துக் கூறுகையில், இப்போதைக்கு வரவேற்போம். தீமை என்று தெரிந்தால் எதிர்ப்போம் .அதை விடுத்து, இதை செய்வது மோடி என்கிற காரணத்தால் குருட்டு பூனை விடடத்துல பாஞ்ச மாதிரி திட்டங்களை எதிர்ப்பது சரியல்ல ..

சிங்கப்பூர் அப்படி இருக்கு,ஆஸ்திரேலியா அப்படி இருக்கு ,, அமெரிக்கா அப்படி இருக்கு,என்று எப்படி எப்படியோ பொலம்புறோம் .ஆனா அந்த நாடுகளில் ஆள்பவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு எப்படி இருக்கு கவனித்து பாருங்க ,, அந்த நாடுகள் ஏன் வேகமாக முன்னேறுகின்றன என்று புரியும் ,, அரசு, மக்கள் இணையும் போதுதான் எந்த திடடமும் வெற்றி பெறும் ,திட்டங்கள் வெற்றி பெற்றால் தான் நாடு வளர்ச்சி அடையும் ,,இரு கைகள் இணைந்தால் தான் ஓசை வரும் ,, ஒரு கை தட்டினால் ஓசை வரும் ,, ஆனால் கொஞ்சம் வலிக்கும் ,, வலி பொறுப்போம் ,, வலிமை பெறுவோம் என்று பேசியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer