Wednesday, November 23, 2016

தஞ்சை, அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் தொகுதிகளில் டெபாசிட் இழந்தன பாஜக, தேமுதிக, பாமக, நம் தமிழர் கட்சிகள்.

நடைபெற்ற தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளிலும், அதிமுக வெற்றி பெற்றது. இத்தேர்தலில், திமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகளில் 6இல் ஒரு பங்கு பெறும் வேட்பாளர்கள் மட்டுமே செலுத்திய தொகையை திரும்பப் பெற முடியும். 

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 57 வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இங்கு டெபாசிட் தொகையை பெறுவதற்கு, 33 ஆயிரத்து 843 வாக்குகள் பெற வேண்டும். இதேபோல, 1 லட்சத்து 64 ஆயிரத்து 582 வாக்குகள் பதிவான அரவக்குறிச்சி தொகுதி யில் 27 ஆயிரத்து 430 வாக்குகளும், ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 388 வாக்குகள் பதிவான தஞ்சாவூர் தொகுதியில் 31 ஆயிரத்து 65 வாக்குகளும், பெற வேண்டும்.ஆனால், பாஜக, தேமுதிக, பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் மூன்று தொகுதிகளிலும் மிகக் குறைவான வாக்குகளையே பெற்றன. 

இதனால், அந்தக் கட்சிகள் டெபாசிட் தொகையை இழந்துள்ளன.திருப்பரங்குன்றம் தொகுதியில் பாமக போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டசபையில் அ.தி.மு.க பலம் 136 ஆக உயர்வு

0 comments :

Post a Comment

 
Toggle Footer