இது நாள் வரை இந்தியாவின் பாதுகாப்பில் இருந்து வந்த கருணாவை, இறுதியாக மோடி அரசு காய்வெட்டியது. இதனை அடுத்து சொகுசு ரக வாகனம் ஒன்றை இறக்குமதி செய்து ஓட்டியது. ஊடகவியலாளரை கொல்ல கருணாவுக்கு தான் துப்பாக்கியை கொடுத்ததாக முன் நாள் புலனாய்வு பிரிவின் உறுப்பினர் ஒருவர் நீதிமன்றில் தெரிவித்தார். இந்த காரணங்கள் போதாதா? உடனே மகிந்தரின் நண்பரை அலேக்காக தூக்கிச் சென்று நீதிமன்றில் நிறுத்தினார்கள் பொலிசார்.
இதனை அடுத்து 7ம் திகதிவரை அவரை விளக்க மறியலில் வைக்குமாறு , நீதவான் உத்தரவிட்டுள்ளார். தற்போது கம்பி எண்ணும் கருணாவுக்கு இனி கழியும் சோறும் தான். குடி கும்மாளம், குட்டி, புட்டி என்று அலைந்து திரிந்த கருணா. போதை தலைக்கேறினால் மைக்கை பிடுங்கி பாடுவார். முன்னர் மகிந்த ஆட்சி காலத்தில் கருணா எங்கே பார்டி களைகட்டவில்லையே என்று பல அமைச்சர்கள் கேட்ப்பது வழக்கமாம். ஏன் என்றால் இவர் பாடலை கேட்க்க சிங்கள அமைச்சர்கள் துடிப்பார்களாம்.
இனி சிறைச்சாலை சென்று தான் பாடவேண்டும். ஆனால் கருணா சிறையில் இருந்து ஒரு பாடலை அடிக்கடி பாட உள்ளாராம். அது என்னவென்றால் "குயிலைப் பிடித்து கூட்டில் அடைத்து பாடச்சொல்லுகிற உலகம்" மயிலைப் பிடித்து கூட்டில் அடைத்து ஆடச்சொல்லுகிற உலகம் அது எப்படி பாடும்மையா? என்று தான்...
athirvu
Tuesday, November 29, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment