Saturday, November 26, 2016

நாலே நாலு சேனல்களை அழைத்து, செல்லாத நோட்டு குறித்த கருத்தை சொன்னாலும் சொன்னார். பிற ஊடகங்கள் பொசுங்கிவிட்டன.

அதென்ன இப்படி பண்ணிட்டார் விஜய் என்று ஆளாளுக்கு அதிருப்தி தெரிவித்தார்கள்.

எப்படியோ, செஞ்சது தப்பு என்பதை உணர்ந்த விஜய், ‘எல்லாரும் வாங்க’ என்று கடுகு உளுந்தம்பருப்பு சேனலில் இருந்து கான்கிரீட் சேனல் வரைக்கும் மீண்டும் ஒரு முறை அழைத்திருந்தார்.

ஆனால் ‘வரும்போது கேமிரா வேண்டாம்’ என்ற கண்டிஷனோடு. ‘சும்மா கை குலுக்கிட்டு கிளம்புங்க. நோ பேட்டி’ என்பதுதான் இந்த சந்திப்பின் கெக்கேபிக்கே.

அப்புறம் என்னாத்துக்கு கூப்புடணுமாம்...? என்று மீண்டும் கொந்தளிக்கும் அவர்களுக்கு, விஜய் ஒரு விளக்கமும் சொல்லவில்லை?

சினிமாவுக்கு அவர் வந்து 20 ஆண்டுகள் ஆகிறதல்லவா? அதற்கான மகிழ்ச்சி(?) சந்திப்பாம்!.

0 comments :

Post a Comment

 
Toggle Footer