Saturday, November 26, 2016

மலையாள திரையுலகில் மிகுந்த பரபரப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்திய... திலீப் - காவ்யா மாதவன் ஜோடி, இன்று கொச்சியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சில் மம்மூட்டி, ஜெயராம், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் சிறப்பான தகவல் என்னவென்றால்... இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். அதாவது  இருவருமே அவரவர் கணவன், மனைவியை விவாகரத்து செய்தவர்கள்.

கடந்த 1998 ஆம் ஆண்டு நடிகை மஞ்சு வாரியரை திலீப் காதலித்து திருமணம் செய்துக் கொண்டு, பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். அதேபோல் கடந்த 2009 ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த விஷால் சந்தர் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட காவ்யா மாதவன், 2011 ஆம் ஆண்டு அவரைவிட்டு பிரிந்தார். இதில் திலீப் - மஞ்சு வாரியர் பிரிவிற்கு காவ்யா மாதவன் தான் காரணம் என அப்போது பேசப்பட்டது. திலீப் - காவ்யா மாதவன் ஜோடி சுமார் 21 படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்தவர்கள். இருவருக்கும் இடையிலான உறவு குறித்து நீண்டநாளாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இன்று அதனை உறுதி செய்யும்விதமாக இருவரும் திருமணம் கொண்டுள்ளனர்.

இது குறித்து நடிகர் திலீப் பேசும்போது " தன்னுடைய மகள் மற்றும் இரு குடும்பத்தின் சம்மதத்துடன்தான் இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளதாகவும். தன்னுடன் பலமுறை காவ்யா மாதவன் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் அவரை தவிர வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்வது சரியாக இருக்காது " எனவும்  கூறினார். இதில் மற்றொரு தகவல், இந்த திருமணம் நடைப்பெற்ற இடத்திற்கு வரும்வரை இருவருக்கும் திருமணம் நடக்கப்போகிறது என்ற தகவலே...  பல பிரபலங்களுக்கு தெரியாமல் இருந்தது தான் ஆச்சர்யம்!.

0 comments :

Post a Comment

 
Toggle Footer