Monday, November 28, 2016

வீட்டில் பார்க்கும் பொண்ணு எனக்கு ஓ.கே என்று சொல்லிவிட்டார் சிம்பு.

ஆனால் இதுவரைக்கும் 50 க்கும் மேற்பட்ட போட்டோக்களை காட்டியும் ‘இது வேணாம்... அது வேணாம்...’ என்று தள்ளி தள்ளிப் போடுகிறாராம்.

கோபத்தில் முடியை பிய்த்துக் கொள்கிற அளவுக்கு ஆளாகிவிட்டார் அப்பா டி.ஆர். மகனோ கூலாக, “நமக்குன்னு ஒருத்தி பொறந்திருப்பா.

ஆனா அவ சினிமாவுல இருக்காளோ, வேற எங்காவது இருக்காளோ” என்று மறுபடியும் ராட்டினம் ஆடுகிறார்.

பிரச்சனை அது மட்டுமா, “பிரண்ட்ஸ் வீட்ல தங்கிக்கிறேன்” என்று கிளம்பும் அவர் மூன்று நாட்கள் கூட தொடர்ச்சியாக வீட்டுப் பக்கம் வராமலிருக்கிறாராம். கால் கட்டு அவசியம் என்று கட்டு கட்டாக ஜாதகத்துடன் சுற்றி வருகிறார் அப்பா.

இவ்வளவு கெடுபிடி நிலைமையிலும், ‘அச்சம் என்பது மடமையடா’ வின் வெளிச்சம், சிம்புவுக்கு புது தெம்பை கொடுத்துவிட்டது. “விரைவில் நானே டைரட் பண்ணினாலும் ஆச்சர்யமில்லை” என்று கூறி வருகிறார் நெருக்கமான நண்பர்களிடம்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பாடல்கள், நடிப்பு, சைக்கிள் டோக்கன், கேட்டீன் டோக்கன் என்று அப்பா வழியில் நடக்காமலிருந்தால் அநேக நமஸ்காரம்!.

0 comments :

Post a Comment

 
Toggle Footer