கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் மு.கருணாநிதி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளனர்.
கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சிறந்த நண்பராக பிடல் காஸ்ட்ரோ விளங்கினார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். 20-ம் நூற்றாண்டின் மிகசிறந்த மாமனிதர் பிடல் காஸ்ட்ரோ என்று கூறினார்.
*என் உயிரோடும், மூச்சோடும் கலந்தவர் பிடல் காஸ்ட்ரோ: என்று திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். உலக பெருமைக்குரிய தலைவர்களில் பிடல் காஸ்ட்ரோ தான் மறக்க முடியாதவர்களில் ஒருவர் என கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும் என் உயிரோடும் மூச்சோடும் கலந்தவர் காஸ்ட்ரோ என கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார்.
Saturday, November 26, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment