இனி பெரிய ஹீரோக்களின் சகவாசமே வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார் நயன்தாரா. மார்க்கெட்டில் முதலிடத்திற்கு வர ஆசைப்படும் சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி மாதிரியான ஹீரோக்கள் போதும்.
அல்லது அவர்களுக்கும் கீழ் லெவல் ஆட்கள் கூட ஓ.கே என்கிற மனநிலைக்கு மாறிவிட்டார். மிஞ்சி மிஞ்சி போனால் இன்னும் இரண்டு வருடங்கள் நடிப்பை தொடரலாம். அதுவரைக்கும் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் தருகிற படங்களில் நடிப்போம் என்பதுதான் அவரது எண்ணம்.
வேடிக்கை என்னவென்றால், அவரது இந்த முடிவுக்கு ஒரு ரியாக்ஷனும் காட்டவில்லை முன்னணி ஹீரோக்கள். குறிப்பாக விஜய். நயன்தாராவின் கொள்கையை அப்படியே ரிவர்ஸ் அடிக்கும் விதத்தில், முன்னணி ஹீரோயின்களுக்கு பதில் அடுத்த லெவல் ஹீரோயின்கள் ஓ.கே என்று கூறிவிட்டார் இவர்.
இதனால் மலையாளத்தில் ஒரு ஹிட் இரு ஹிட்டடித்த ஹீரோயின்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கக் கூடும்! இலையுதிர் காலமோ, இளவேணிற் காலமோ? மரம் எடுக்கிற முடிவுக்கு மருவாதி கொடுத்துதானே ஆவணும்?
Saturday, November 26, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment