Thursday, November 24, 2016

கொளுத்திப் போடுவதே வேலை என்றாகிவிட்டபின், சுழி சும்மாயிருக்குமா? பொதுவாக ஒரு படத்தின் வெற்றியை அந்த படத்திற்காக நாலு வரி நல்லதாகவோ, கெட்டதாகவோ எழுதிய பிரஸ்சையும் அழைப்பதுதான் வாடிக்கையாக இருந்தது.

ஆனால் கிளாசும் கிளாசும் வைத்த மாதிரி, சிலர் மட்டும் கூடி சக்சஸ் மீட்டை ஜமாய்த்துவிட்டார்கள். அச்சம் என்பது மடமையடா படத்தின் மீட்தான் அது.

பல வருஷம் கழித்து ஒரு ஹிட். சிம்புவுக்கு எல்லை மீறிய உற்சாகம். அங்குதான் ஒரு புறம் த்ரிஷாவும், இன்னொருபுறம் வரலட்சுமியுமாக இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஒரு செல்ஃபி எடுத்தார்கள்.

சூடோடு சூடாக அதை சிம்பு வெளியிட்டிருந்தால் கூட மன்னித்துவிடலாம். வெளியிட்டது விஷாலின் வருங்காலம் வரலட்சுமி. உடனே சோடி மாறிடுச்சோ என்று வல்கராக கமென்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டது ஊர் உலகம். கலகத்துக்கு கற்பூரம் ஏத்துனா, உலகம் இப்படி உருட்டி விளையாடதான் செய்யும். என்ன பண்ணுறது?

0 comments :

Post a Comment

 
Toggle Footer