பிரதமர் நரேந்திர மோடி மிகவும் திமிர் பிடித்தவர்; இது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் காஜிபூரில் இன்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர் ஜனநாயகத்தில் தனி ஒருவரது விருப்பப்படிதான் அனைத்தும் நடக்க வேண்டும் என்பதற்கு எப்போதும் இடமில்லை.
அப்படி யாரும் நினைத்தால் அது நடக்காது. தனது விருப்பப்படிதான் அனைத்தும் நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் பிரதமர் மோடி. பிரதமராக இருப்பவர் திமிர் பிடித்தவராக இருக்கக் கூடாது. அவர் தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று எச்சரிக்கிறேன் என்று கூறினார்.
Thursday, November 24, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment