Saturday, November 26, 2016

விஜயகாந்த் நடித்த 'சத்ரியன்', அஜித் நடித்த 'பவித்ரா' உட்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் கே.சுபாஷ். இவரது இயக்கத்தில் வெளிவந்த நேசம், நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பில் போன்ற படங்களை  இன்றும் யாராலும் மறக்க இயலாது. இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக "நாயகன் " உட்பட பல படங்களில்  பணிபுரிந்த இவர், பின்பு இயக்குனராக  தமிழ், ஹிந்தி என பல மொழிகளிலும் தனது வெற்றி அடையாளங்களை பதித்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக அமைந்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திலும் இவரது பங்களிப்பு பெரிதும் உண்டு.

இத்தகைய மாபெரும் படைப்பாளி நேற்றைய தினம் காலமானார். 57 வயது நிரம்பிய இவர் சிலதினங்களுக்கு முன்பு சென்னை வடபழனியிலுள்ள எ.ஆர்.எம்.மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சையில்  இருந்து வந்த இவர் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, இவரது உடலுக்கு திரையுலகை சேர்ந்த அனைவரும் மரியாதை செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஷால் " இயக்குனர் கே.சுபாஷ் தான், தன்னை ஒரு நடிகனாக அடையாளம் கட்டியதாகவும் . மேலும் அவருடைய கதையில் தானும், கார்த்தியும் நடிக்க திட்டமிட்டிருந்த நிலையில்... தற்போது அவரது மரணம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும். ஆனால் அவர் இல்லாவிட்டாலும் அவரது கதையில் நாங்கள் நடிக்க இருப்பது  மாபெரும் பாக்கியம் எனவும்" தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer