நாடே ஐநூறு ஆயிரத்தை வைத்து அல்லாடிக் கொண்டிருக்க, பெங்களூருவில் நடந்த ஜனார்த்தன ரெட்டி இல்லத் திருமணம் எல்லார் வயிற்றிலும் விறகு அடுப்பை பற்ற வைத்தது.
இந்த அடுப்பில் இன்னும் கொஞ்சம் எண்ணையை ஊற்றியிருக்கிறார் தமன்னா.
காத்ரீன் தெரசா, ராகுல் ப்ரீத்தி சிங் என்று சிலர் அந்த நிகழ்ச்சியில் ஆடியிருந்தாலும் தமன்னா மீதுதான் சரியான எரிச்சலில் இருக்கிறது டோலிவுட்டும் கோலிவுட்டும். இங்கு நடக்கும் சினிமா பிரமோஷன்களுக்கு அவரை அழைப்பதற்குள் பெரும்பாடு பட்டுவிடுகிறார்கள் இவர்கள்.
ஆனால் ஒரு கல்யாண விழாவுக்கு போய் அத்தனை பேர் முன்னால் ஆடுவதற்கு மட்டும் இவ்வளவு ஆசை, விருப்பம் ஏன் என்பதுதான் இவர்களின் எண்ணம். அவர்களுக்கெல்லாம் தெரிந்திருக்குமா?
இந்த ஒரு பாட்டுக்கு அவர் வாங்கிய சம்பளம் அறுபது லட்சம் என்பது! ஜனார்தன ரெட்டி இன்னு கொஞ்சம் ஜாஸ்தி கொடுத்தால், வெறும் தமன்னா, தமன்னா ரெட்டியாகவும் தயங்க மாட்டார் என்பதுதான் கள நிலவரம்!.
Saturday, November 26, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment