Saturday, November 26, 2016

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் ரூபாய் 3.01 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர் என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 54 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 8 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.மலைப்பாதை வழியாக நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 அறைகளில் காத்திருந்து 2 மணி நேரத்துக்கு பிறகு தரிசனம் செய்தனர்.

ரூ.300க்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரூ3.01 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer