எடுப்பது தமிழ் படம். எதற்கு மும்பையில் விழா? என்ற கேள்வியை எழுப்பிவிட்டது ‘2பாயின்ட்0’ படத்தின் முதல் தோற்ற நிகழ்ச்சி.
(முதலிலேயே தோற்ற நிகழ்ச்சி என்றும் வாசிக்கலாம். ஏனென்றால் அப்படியொரு சொதப்பல்) இந்த நிகழ்வை அப்படியே யு ட்யூபில் லைவ்வாக நடத்த தீர்மானித்த ஷங்கர், அதற்கான ஏற்பாடுகளை தனது உறவினர் ஒருவரிடம் ஒப்படைத்தாராம்.
ஏற்கனவே ‘ஐ’ பட நிகழ்வையும் அதே ‘தெய்வ மச்சான்‘தான் நடத்தினார். அதிலும் படுபயங்கர சொதப்பல் நிகழ்ந்தது. அதை மிஞ்சிவிட்டது இது. உலகம் முழுக்க சுமார் 15 ஆயிரம் பேர் (அவ்ளோதானா உங்க டக்கு?) யு ட்யூபுக்கு முன் காத்துக் கிடக்க, வெறும் விளம்பரங்கள் மட்டும்தான் ஓடிக் கொண்டிருந்தன.
சுமார் முக்கால் மணி நேரம் கழித்து எல்லாரும் மேடையை விட்டு கிளம்புகிற நேரத்தில்தான் யு ட்யூப் கண் திறந்தது. கடுப்பான பல ரசிகர்கள், கண்டபடி திட்டிக்கொண்டே மானிட்டரை குளோஸ் பண்ணியிருந்தார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ரஜினி படத்தில் ரஜினிதான் சூடம், சாம்பிராணி, உடுக்கை எல்லாம்.
ஆனால் முதன் முதலில் அவரது புகழையும் பிரித்துக் கொண்டார் அக்ஷய்குமார். இவருக்கும் அவருக்கும் சமமாக கூட அல்ல. ஒரு படி ஜாஸ்தியாகவே அக்ஷய்குமாருக்கு பப்ளிசிடி கொடுக்கப்பட்டிருந்தது அங்கே. ‘2பாயின்ட் ஓ’ஹோவாக வந்திருக்க வேண்டிய விழா. ஹ்ம்..
Monday, November 28, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment