Saturday, November 26, 2016

மேஷம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். 

ரிஷபம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில்  சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.  தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை  நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை  வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.
  
கடகம்:  எதிர்ப்புகள் அடங்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.  புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும்  நாள்.  

சிம்மம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு  கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றி பெறும்  நாள்.   
  
கன்னி: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். அழகு, இளமைக் கூடும். தள்ளிப் போன விஷயங்கள்  உடனே முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து  முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.    
    
துலாம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள்.  லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். நேர்மறை எண்ணங்கள்  தேவைப்படும் நாள்.

விருச்சிகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். யாருக்காகவும் சாட்சி  கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி  வெல்லும் நாள்.  

தனுசு: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள். 

மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். உங்களால்  வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய பொறுப்பை  ஏற்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.   
  
கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள்  மதிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.    

மீனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை  எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.  எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer