Friday, November 25, 2016

மேஷம்: எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

மிதுனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

சிம்மம்: இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

கன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

துலாம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

விருச்சிகம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

தனுசு: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்,  நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். மற்றவர் களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.

கும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

மீனம்:  எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer