Thursday, October 27, 2016

பேசுறதுக்கு ஆள் இல்லே. நீங்களே நிறைய நேரம் பேசிடுங்க என்று கார்த்தி ரகசியமாக விவேக் காதை கடிக்க, அதற்கப்புறம் மைக்கை பிடித்த அவர் கடியோ கடியென கடித்துத் தள்ளிவிட்டார். மிக நீண்ட உரை அது. காஷ்மோரா பிரஸ்மீட் இப்படியாக முடிய, அதில் விவேக் பேசிய ஒரு விஷயம் இன்னும் கேடுபாடாக முடிந்தது.

“நயன்தாரா இந்த பிரஸ்மீட்டுக்கு வந்திருக்கணும். ஆனால் அவர் தன் படம் சம்பந்தப்பட்ட பிரமோஷன்களுக்கு வர்றதேயில்ல. கேட்டால் நான் வந்தால் படம் ஓட மாட்டேங்குதுன்னு ஒரு சென்ட்டிமென்ட்டை சொல்லி தயாரிப்பாளரின் வாயை அடைத்துவிடுகிறார். ஒண்ணு பண்ணலாமே? என்னோட கடைசி பேமென்ட்டை நான் வாங்குனாலும் படம் ஓட மாட்டேங்குது. அதனால் வேணாம்னு சொல்லலாமே?” என்று அவர் சொல்ல, அப்படியே ஊதி விஷயத்தை விஷமாக்கிவிட்டது மீடியா. பதறிப்போன விவேக், “நயன்தாரா என்னோட நல்ல கோ ஆர்ட்டிஸ்ட்.

நான் தப்பா சொன்ன மாதிரி ஒரு டோர்ன் வந்திருச்சு. மீடியா கொஞ்சம் கரெட் பண்ணி போடுங்க” என்றார். திருப்பி திருப்பிப் போட அது என்ன பில்டர் காபியா? விடுங்க விவேக் சார்....

0 comments :

Post a Comment

 
Toggle Footer