Monday, October 31, 2016

யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை காலை முதல் மாணவர்களினால் முடக்கப்பட்டுள்ளது. 

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 20ஆம் திகதி வியாழக்கிழமை பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டதனைக் கண்டித்தும், நீதி கோரியும் யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை முதல் முடக்கப்பட்டது.

இந்த நிலையில், மாணவர்களுக்கான நீதி கோரி, பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளையும் முடக்குவதற்கு மாணவர்கள் இன்று தீர்மானித்துள்ளனர். இதனையடுத்து, இன்று நிர்வாக நடவடிக்கைகளுக்கான வருகை தந்தவர்கள் மாணவர்களினால் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer