Tuesday, October 25, 2016

அனைத்து வங்கிகளுக்கும் சைபர் பாதுகாப்பு அமைப்பு நிறுவுவதற்கு விரைவில் ஆவணை செய்யப்படும் என்று, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

அண்மையில் பொது மக்களின் வங்கிக் கணக்கு ரகசிய குறியீட்டு எண்கள் திருடப்பட்டு, பலரின் கோடிக் கணக்கான பணம் கொள்ளை போனது. இது பொது மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அச்சத்தை போக்கி பொது மக்களின் பணத்துக்கு பாதுகாப்பு உறுதி அளிப்பது வங்கிகளின் கடமை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதையடுத்து சில முக்கிய வங்கிகளின் அதிகாரிகளுடன் ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தியது. 

ஆலோசனையில் மிக விரைவில் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து அனைத்து வங்கிகளிலும் சைபர் பாதுகாப்பு அமைப்பை நிறுவ ஆவன செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer