Tuesday, October 25, 2016

ராகுல் அல்லது சோனியாவுடன் நேரடி விவாதம் நடத்தத் தயார் என்று, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஆம் ஆத்மின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால்,காங்கிரஸ் கட்சிக் குறித்து சரமாரி குற்றச்சாட்டுக்களை வைத்தார். இதையடுத்து, அம்மாநில காங்கிரஸ் தலைவர் பஞ்சாப் மக்கள் எதையும் நேரடியாக கூறுபவர்கள் என்றும், எனவே, அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸுடன் நேரடி விவாதத்துக்குத் தயாரா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். 

மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் அமர்சிங்குக்கு பதில் அளித்துள்ள கெஜ்ரிவால், ராகுல் அல்லது சோனியாவுடன் நேரடி விவாதத்துக்குத் தயாராக இருப்பதாகவும், விவாதம் நடைப்பெறும் திகதி மற்றும் இடத்தை காங்கிரஸ் தேர்வு செய்யலாம் என்று அறிவித்துள்ளார். அதோடு, பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி குழு, இந்த நேரடி விவாதத்தில் கலந்துக்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer