Monday, October 31, 2016

பிரதமர் நரேந்திர மோடி எல்லையில் இராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.

கடந்த 2014ஆம் வருடம் பிரதமராகப் பதவியேற்ற பிரதமர் மோடி, தொடர்ந்து முன்றாவது ஆண்டாக தீபாவளிப் பண்டிகையை எல்லைப் பகுதியிலுள்ள இராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். அதன்படி இமாசலப் பிரதேச மாநிலம் கின்னாரில் உள்ள இராணுவ முகாமில் வீரர்களை பிரதமர் சந்தித்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். அங்கிருந்த  வீரர்கள் சிலருக்கு மோடி இனிப்புக்களை ஊட்டிவிட்டார். பதிலுக்கு வீரர்களும் பிரதமருக்கு இனிப்பு ஊட்டினர். அப்போது, இந்திய திபெத்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களையும் பிரதமர் சந்தித்தார். 

இ‌ராணுவ முகா‌முக்கு செல்லும் முன் அருகிலுள்ள சாங்கோ என்ற கிராமத்துக்கு சென்ற மோடி அங்குள்ள மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவிச்சார். இந்த சந்திப்பு முன்கூட்டியே திட்டமிடப்படாமல் நடந்தது என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer