Monday, October 31, 2016

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஏற்கனவே திருமணம் ஆகி கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்த பெண் போலீசை இரண்டாம் திருமணம் செய்தவரை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தெற்கு பரணம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் செல்வகுமார்(40). இவருக்கு திருமணம் ஆகி மனைவி லதா(36) மற்றும் 16 வயது மற்றும் 14 வயதில் இரண்டு மகள்களும் 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இரும்புலிகுறிச்சி காவல்நிலையத்தில் காவலராக பணிபுரியும் மணிமுருகன் மனைவி ராதிகா(33). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கணவனை விட்டுபிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை அன்று கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் உள்ள ஒரு கோவிலில் செல்வகுமாரும் ராதிகாவும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த செல்வகுமாரின் மனைவி லதா ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் செல்வகுமாரை கைதுசெய்து விசாரிக்கின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ராதிகாவை தேடிவருகின்றனர்.


1 comments :

 
Toggle Footer