Tuesday, October 25, 2016

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.

காவிரி நதிநீர் பங்கீடுத் தொடர்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதுத் தொடர்பாக, திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தது.இந்த கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று, அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.திமுகவின் கூட்டணிக் கட்சிகள் தவிர, தமிழ் மாநில காங்கிரஸ், விவசாய  சங்கங்கள் கலந்துக்கொள்கின்றன. மதிமுக பங்கேற்காது என்று அறிவித்த  நிலையில்,தேமுதிகவும் பங்கேற்காது இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்று அறிக்கை வெளியாகி உள்ளது. 

தற்போது, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer