அமெரிக்காவின் முன்னால் இராஜதந்திரிகள் அடங்கிய குழு ஒன்றிட்கும் வடகொரியாவின் அரச அதிகாரிகளுக்கும் இடையே மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இரு நாட்களுக்கு அதிகார பூர்வமற்ற சந்திப்பு ஒன்று மூடிய கதவுகளுக்கிடையே இடம்பெற்றுள்ளது.
Track 2 எனப்படும் இப்பேச்சுவார்த்தை சர்வதேசம் வடகொரியாவை பொருளாதார ரீதியாகவும் அரசியல் இராஜதந்திர ரீதியாகவும் தனிமைப் படுத்த முனைந்து வரும் நிலையில் இடம்பெற்றுள்ளது. இதனை தென்கொரியாவும் அமெரிக்காவும் உறுதிப் படுத்தியுள்ளன. ஏற்கனவே வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் இற்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்ததால் ஜுலை மாதம் தனது ஒரேயொரு இராஜதந்திர நாடான அமெரிக்காவுடன் தனது இறுதி அரசியல் உறவில் இருந்தும் விடுபடுவதாக வடகொரியா அறிவித்திருந்தது.
வடகொரியாவின் இந்த ஒரேயொரு உறவே ஐ.நா சபையில் அதன் அரச அதிகாரிகள் ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக இருந்து வந்தது. இந்நிலையில் மலேசியாவில் அண்மையில் இடம்பெற்ற இரகசிய சந்திப்பு வியாழனன்று வடகொரியா மேற்கொண்டிருந்த சக்தி வாய்ந்த மத்திய ரக ஏவுகணைப் பரிசோதனையின் பின்னர் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது அணுவாயுத மேம்படுத்தலுடன் சேர்த்து வடகொரியா அமெரிக்காவுடன் சமாதான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது அவசியம் என வடகொரிய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தினர் எனக் கூறப்படுகின்றது. ஆனால் அமெரிக்க தரப்பிலோ வடகொரியாவின் அணுவாயுத விவகாரத்துக்கே முதலிடம் கொடுக்கப் பட்டு அழுத்தம் பிரயோகிக்கப் பட்டுள்ளது.
செப்டம்பரில் தனது 5 ஆவது அணுப் பரிசோதனையை வடகொரியா மேற்கொண்டதால் இன்னும் புதிய விதத்தில் அதனைத் தண்டிக்க ஐ.நா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
மலேசியாவில் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தை
Wednesday, October 26, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment