Thursday, October 27, 2016

கடந்த சில வருடங்களாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள்  போன்ற பல படங்கள் பெரிய அளவில் வெற்றிப் பெறாததால், அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தற்போது ஆர்யா இருக்கிறார். ஒரு காலத்தில் தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களை கொடுத்தவருக்கா! இந்த நிலைமை? என்று இருந்தாலும். தற்போது இவர் நடித்துவரும் 'கடம்பன்' பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில்  காடுகளில் வாழும் பழங்குடி இனத்தவராக நடித்துள்ள ஆர்யா... அந்த கேரக்ட்டருக்காக தனது  உடல் எடையை அதிகரித்து, முறுக்கேற்றி பாடி பில்டரைப் போல் மாற்றியுள்ளார்.

'மஞ்சப்பை' ராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் கேதரின் தெரசா, ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் மதுவந்தி, ஒய்.ஜி.மகேந்திரன், சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெகு நாட்களுக்கு பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவர உள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த டீசரை சூர்யா, விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர். ஆர்யாவின் வெற்றிக்காகவே இந்த மூவரும் களமிறங்குவதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer