Monday, October 31, 2016

இளைய தளபதி நடிப்பில் உருவாகி வரும் பைரவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசரை, அறிவித்த நேரத்தில் வெளியிட விடாமல், இணையத் தளத்தில் திருட்டுத் தனமாக சில கள்ளர்கள் வெளியிட்டு, விஜய் தரப்பினருக்கு தொடர்ந்து அதிர்ச்சியைத் தந்து வருகின்றனர்.

அதே போன்று,தீபாவளியை முன்னிட்டு விஜய்யின் பைரவா படத்தின் டீசர் 28 -ஆம் தேதி அதிகாலை 12.01 இணையத்தில் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், வில்லங்க ஆசாமிகள் டீசரை திருட்டுத்தனமாக 27 -ஆம் தேதி இரவு இணையத்தில் வெளியிட்டனர்.

இதற்கு மேலும் தாமதித்தால் மரியாதை இல்லை என்று உடனடியாக இரவு ஒன்பதைரை மணிக்கே பைரவா டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசரை அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பு, திருட்டுப் பேர்வழிகளில் இணையத்தில் பதிவேற்றிவிடுகின்றனர். இந்தமுறையும் திருட்டு பேர்வழிகள்தான் முந்திக் கொண்டுள்ளனர். 

நல்லவேளை படத்தையாவது அதிகாரப்பூர்வமாக வெளியிட விட்டு வைத்திருக்கிறார்களே.என்று, விஜய் தரப்பு என்னதான் சமாதானமாகப் போக நினைத்தாலும், திருட்டு ஆசாமிகள் விடுவார்களா?

0 comments :

Post a Comment

 
Toggle Footer