Tuesday, October 25, 2016

தமிழ் திரையுலகின் மிகவும் பிசியான நடிகர் யார்? என்று கேட்டால், இன்றைய தேதியில் 'விஜய்சேதுபதி' என்று அனைவரும் சொல்வார்கள். அந்த அளவுக்கு... இந்த ஆண்டு மட்டும்  தொடர்ந்து 6 படங்களில்  (சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க)  நடித்து, அதில் வெற்றியும் கண்டுள்ளார். மேலும்  தற்போது, கே.வி.அனந்த் இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் “கவண்” திரைப்படத்தின் நாயகனும் இவர் தான். இதில் டி.ராஜேந்தர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 23 ஆம் தேதி ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு பிறகு விஜய்சேதுபதி.. 'ரேணிகுண்டா' புகழ் பன்னீர்செல்வம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க உள்ளார்.மேலும், இந்த படத்தில் மீண்டும் விஜய்சேதுபதியுடன்,  ரித்திகாசிங் ஜோடி சேர உள்ளதாக  தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளியான 'ஆண்டவன் கட்டளை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த வெற்றி ஜோடி மீண்டும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.. இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer