Wednesday, October 26, 2016

கோட்டானுக்கு கூலிங் கிளாஸ் போட்ட மாதிரிதான், சிம்புவின் கால்ஷீட் டைரியில் ஆங்காங்கே அடித்தல் திருத்தல்கள் இருக்கும்! என்ன காரணத்தாலோ, அவர் நினைத்ததை விடவும் சீக்கிரமாக போய் கொண்டிருக்கிறது அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படப்பிடிப்பு.

திடீரென யார் கண் பட்டதோ? இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் சிம்புவுக்கும் முட்டிக் கொண்டது. காரணம்...? ட்விட்டரில் சினிமா தகவல்களை எழுதி வரும் சில புண்ணியவான்கள்தான்.

இவர்கள் மொத்தமாக கிளம்பி சிம்புவை பார்க்கப் போனார்களாம். வழக்கமாக பிரஸ் என்றால் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்ளும் வழக்கமுடைய சிம்பு, இவர்களுக்கு மட்டும் ரெட் கார்ப்பெட் வரவேற்பு கொடுத்திருக்கிறார். அதோடு விட்டாரா? தனது அஅஅ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் காட்சிகளை போட்டுக் காட்ட, ட்விட்டர் பார்ட்டிகளில் ஒருவர் இது பற்றி சுகபோகமாக எழுதித் தள்ளிவிட்டார்.

கடுப்பான ஆதிக், சிம்புவை அழைத்து “நான்தான் டைரக்டர். ஃபஸ்ட் லுக்கை நான்தான் வெளியுலகத்துக்கு காட்டணும். அது உங்க வேலை இல்ல” என்று கொதிக்க, பதிலுக்கு இவர் சிடுசிடுக்க, நான்கு நாட்களாக அவரவர் நாக்குக்கு ஊரடங்கு உத்தரவு போட்டுக் கொண்டார்களாம். ஹீரோவும் டைரக்டரும் பேசலேன்னா படம் குட்டிச் சுவராகிடுமே... சமாதான முயற்சியில் இருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer