Thursday, October 27, 2016

விஜய்சேதுபதி நடிப்பில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் ‘மெல்லிசை’. இதில் விஜய் சேதுபதியுடன் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்திற்கு பிறகு மீண்டும் நடிகை காயத்திரி ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அந்த படத்திலேயே இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆனதால் , இந்த படம் அறிவிக்கப்பட்டபோது மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் படபிடிப்புகள் முடிந்து வெகு நாட்கள் ஆகியும் ஒரு சில காரணத்தால் வெளியாகாமல் தொடர்ந்து இழுவையில் இருந்து வருகிறது. தற்போது இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ் குமார் வெளியிடவிருக்கும் இப்படத்தின்  டைட்டிலை மட்டும் இப்போது மாற்றியுள்ளனர். 1990 ஆம் ஆண்டு.. ரகுமான், ரகுவரன் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார்  இயக்குனராக அறிமுகமான 'புரியாத புதிர்' என்ற படத்தின் டைட்டிலே தற்போது இந்த படத்திற்கு வைத்துள்ளனர். அது எந்த 'புரியாத புதிர்' படம் என்று யோசிக்கிறீர்களா? நடிகை ரேகாவை அடித்து உதைத்து, படம் முழுவதும் அவரை பார்த்து ரகுவரன் 'ஐ நோ', 'ஐ நோ' என்று சொல்வாரே அதே 'புரியாத புதிர்' தான் . அந்த காலகட்டத்தில்  இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்தப்படத்தில் விஜய் சேதுபதி 'ஐ நோ' சொல்ல தயாராகிவிட்டாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer