Saturday, October 29, 2016

இன்னமும் தயாரிப்பாளர் தாணுவின் கைப்பிடியில்தான் இருக்கிறார் கபாலி இயக்குனர் பா.ரஞ்சித். தம்பி நாம சேர்ந்து இன்னொரு முறை படம் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறாராம். வேவ் லெங்க்த் அப்படி! இந்த நிலையில்தான் ஒரு அதிரடி திருப்பம்.

கபாலிக்குப் பின்பும் பா.ரஞ்சித்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்த ரஜினி, அதை தன் வாயாலேயே அறிவித்தும் விட்டார். ஆனால் அதற்கான கால நேரம்தான் எப்போது என்கிற முடிவுக்கு வர முடியாத நிலை. எந்திரன் பார்ட் 2 முடிந்ததும், சில மாதங்கள் அமெரிக்காவில் சென்று ஹெல்த்தை கவனிக்க போகிறார் ரஜினி. அதனால் ஆகஸ்ட்டில்தான் ஷுட்டிங் என்றும் கூறிவிட்டாராம்.

அதுவரைக்கும் என்ன பண்ணுவது? தானே சொந்தமாக ஒரு கம்பெனி துவங்கி மினிமம் பட்ஜெட்டில் படம் தயாரிக்கக் கிளம்பிவிட்டார் ரஞ்சித். இந்தப்படத்தை நம்ம பேனர்லேயே ரிலீஸ் பண்ணித் தர்றேன் என்று கூறியிருக்கிறாராம் தாணு. படைப்பாளி முதலாளி ஆகும்போதெல்லாம், எங்கோ ஒரு ஆந்தை நின்று அர்த்த ராத்திரியில் அவறுகிறது. அதனால் படைப்புத்திறனுக்கு படுபயங்கர டிஸ்ட்ரப்! பா.ரஞ்சித் விஷயத்தில் ஆந்தையின் அலறல் சப்தம் ஊமையாகி ஒலிக்கட்டும்... டும்.. ம்!.

0 comments :

Post a Comment

 
Toggle Footer