Tuesday, October 25, 2016

இப்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வராத கட்சிகள் எதிர்காலத்தில் வரும் என்று நம்பிக்கை உள்ளது என்று, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுத் தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த திமுக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கூட்டி உள்ளது. கூட்டத்துக்கு முன்னதாக பேசிய ஸ்டாலின், ஆளும் கட்சி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாததால், திமுக கூட்டியது என்று கூறினார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்து உள்ளன என்றும், இப்போது வராத காட்சிகள் எதிர்காலத்தில் வருவார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். 

தேமுதிக, மக்கள் நல கூட்டணிக் கட்சிகள், பாஜக ஆகியவை திமுக கூட்டி உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்து உள்ளன என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer