Thursday, October 27, 2016

சமீபகாலமாக தமிழ் திரையுலகில் விவாகரத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு சமீபத்திய அமல பால், ஏ.எல். விஜய் ஜோடி துவங்கி... ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா வரை நடந்த சம்பங்களே சாட்சிகள். இந்நிலையில் சற்று வித்யாசமாக பிரிந்திருக்கும் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு நடிகை ரம்பா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தொடையழகி என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை ரம்பா பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார் என்பது  நாம் அறிந்ததே. கோலிவுட் துவங்கி பாலிவுட் வரை  சுமார் 17 ஆண்டுகள் திரையுலகில் கொடிகட்டி பறந்த இவர், பின்பு  கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதனை கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு கனடாவில் செட்டிலான ரம்பா படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ரம்பாவுக்கு லான்யா, சாஷா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் வழக்கம் போல அவருக்கும், கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, விவாகரத்துக்கு தயாராகி.. கடந்த சில வருடங்களாகவே  கணவரை பிரிந்து ரம்பா வாழ்ந்து வருகிறார். ஆனால் தற்போது தன் குழந்தைகளை பார்த்துக் கொள்வது சிரமமாக இருப்பதாகவும், குடும்ப வாழ்க்கையை தற்போது புரிந்து கொண்டுள்ளதால், கருணை அடிப்படையில் தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு... ரம்பா குடும்ப நல நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 3-ந் தேதி விசாரணைக்கு வரும் என்றும் கூறுப்படுகிறது. இதற்கு பிறகு சச்சரவுகள் தீர்ந்து இருவரும் சேர்வது உறுதியானால்... விவாகரத்துக்கு பிறகு பிரிவின் வலியில் இருக்கும் ஒவ்வொரு தம்பதியர்களும்  மீண்டும் இவர்களை  போல சேர வேண்டும் என்பதே நம்முடைய அவா...!

0 comments :

Post a Comment

 
Toggle Footer