Monday, October 31, 2016

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மத்திய சிறையில் காவலாளியை கொன்றுவிட்டு தப்பியோடிய சிமி தீவிரவாதிகள் 8 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

தடை செய்யப்பட்ட சிமி அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதில் இன்று (31.10.2016) அதிகாலை 3 மணி அளவில் சிறையில் இருந்து தப்பியுள்ளனர். ராம்சங்கர் என்ற சிறை காவலாளியை கொன்றுவிட்டு சுற்றுச் சுவர் ஏறி தப்பியுள்ளனர். இதற்கான படுக்கை விரிப்புகளை ஒன்றோடு ஒன்று இணைத்து பயன்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து தப்பியோடிய தீவிரவாதிகளை பிடிக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். போபால் பகுதியின் எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டது. கைதிகள் தப்பியோடியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில் காவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ப்பியோடிய சிமி தீவிரவாதிகள் 8 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer