Sunday, October 30, 2016

மட்டக்களப்பு பிரதேசத்தில் குண்டு துளைக்காத (Ford Bullet Proof SUV) வாகனம் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டிருந்தது. குறித்த வாகனம் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஹொங்கொங் நாட்டிலிருந்து, ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த மோட்டார் வாகனத்தின் பெறுமதி 78 633 385.00 சுமார் 8 கோடி) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. ராஜபக்சர்களின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த மோட்டார் வாகனம் தொடர்பில் சுங்க பிரிவில் அல்லது துறைமுகத்தில் எந்த ஒரு ஆவணங்களும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சொகுசு வாகனம் துறைமுகத்தின் ஊடாக மோசடியான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், எந்தவொரு வரி பணம் அல்லது அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள் இந்த வாகனத்திற்காக செலுத்தப்படவில்லை. அது மாத்திமின்றி இந்த வாகனம் அரசாங்க மோட்டார் வாகன பதிவு திணைக்களத்திலும் பதிவு செய்யப்படவில்லை. வாகனத்திற்காக எவ்வித காப்புறுதிகளும் பெற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால் இந்த வாகனத்தை கருணாவே பயன்படுத்தி வந்ததோடு ஆட்சி மாறியவேளை அப்படியே வாகனம் திருத்தும் ஒரு இடத்தில் பதுக்கிவிட்டார். எந்த புண்ணியவானோ சொன்ன தகவலில் இதனை பொலிசார் கைப்பற்றியுள்ளார்கள்.

ஆனால் ரணில் உத்தரவுக்கு அமைய கருணாவிடம் பொலிசார் இது குறித்து எந்த விசாரணையும் நடத்தவில்லை. ஏன் எனில் கருணாவுக்கு ரணிலின் பாதுகாப்பு உண்டு. இது ஊர் அறிந்த விடையம்.

athirvu

0 comments :

Post a Comment

 
Toggle Footer