Monday, October 31, 2016

தீபாவளி பட்டாசுகளால் டெல்லியில் வழக்கத்தை விட 40 மடங்கு மாசு அதிகம் படிந்துள்ளது என்று, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

டெல்லி காற்றில் அதிக மாசு படிந்துள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதில் வழக்கத்தை விட இந்த ஆண்டு டெல்லி மக்கள் அதிகம் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடி உள்ளனர். இதனால் டெல்லி காற்றில் வழக்கத்தை விட 40 மடங்கு மாசு படிந்துள்ளது என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

வட மாநிலங்களில் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், டெல்லியில் நேற்று கடுமையான புகை மண்டலம் பட்டாசு வெடிதத்தில் உண்டானதால், 4 விபத்துக்களும் நடைப்பெற்று உள்ளன என்பதும் இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer