Thursday, October 27, 2016

சிவகாசி பட்டாசு விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 3 லட்சம் ரூபாய் வழங்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

கடந்த வாரம் சிவகாசியில் பட்டாசுக்கடையில் தீ விபத்து நேரிட்டது. இந்த கடை, மருத்துவ சோதனைகள் செய்யும் ஒரு சோதனை கூடத்துக்கு அருகில் செயல்பட்டு வந்ததால், சோதனைக் கூடத்தில் பணியாற்றியவர்களும் என்று மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செயுது விசாரித்து வருகிறது. இதற்கிடையில் இன்றைய விசாரணையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்காலிக நிவாரண நிதியாக தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer