Monday, October 31, 2016

சுசி கணேசன் இயக்கத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘திருட்டுப்பயலே’. இதில் ஜீவன், சோனியா அகர்வால், அப்பாஸ் மற்றும் மாளவிகா ஆகியோர் நடித்திருந்தனர். அந்த சமயத்தில் மாபெரும் வெற்றியைப்  பெற்ற இப்படத்தில் மாளவிகாவின் கதாபாத்திரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளத்தொடர்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த? இந்த கதைக்  களத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக சமீபத்தில் இயக்குனர் சுசி கணேசன் அறிவித்திருந்தார்.

அதன் படி திருட்டுப் பயலே 2ஆம் பாகத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா ஆகியோர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது . தற்போது முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அமலாபால் ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் மாளவிகா ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் தான்  அமலாபால் நடிக்கவிருக்கிறாரோ? என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், ‘வடசென்னை’ என்ற ஒரு படம் மட்டுமே கைவசம் இருந்த அமலாபாலுக்கு இது கூடுதல் போனஸ்.. இந்தப்  படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தாயரிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer