Wednesday, October 26, 2016

மதுரை மாவட்டத்தில் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தீபாவளிக்காக மதுவிற்பனை களைக்கட்டும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மட்டும் 4 நாட்கள் இயங்காது என அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் தேவர் ஜெயந்தி விழா மதுரை மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ளது. இதனால் இங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பொதுகூட்டம் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். 

எனவே இங்கு எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 27ம் தேதி முதல் 30ம் தேதிவரை 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer