Wednesday, October 26, 2016

தொழில் புரிய ஏதுவான நாடுகளில் இந்தியா 130 வது  இடத்தில் உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. உலகில் தொழில் புரிய ஏதுவான நாடுகளின் வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது உலக வங்கி. அதன் படி கடந்த ஆண்டு 131 வது இடத்தில் இருந்த இந்தியா,, இந்த வருடம் சற்றே முன்னேறி, 130 வது இடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவின் இந்த நிலைக்கான காரணம் என்று பார்த்தால் தொழில் தொடங்க வசதியான கட்டமைப்பு இல்லை, அனுமதி பெறுவதில் சிக்கல், கடனை நீடிப்பதால் நேரும் சிக்கல் என்று பல்வேறு காரணங்கள் உள்ளன என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

அதோடு,உலக முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க ஏதுவான நாடுகளில் நியூசிலாந்து முதலிடத்திலும், சிநகப்பூர் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தான் 144 வது இடத்திலும் உள்ளன.ஆனால், மத்திய அரசின் புதிய 12 அம்ச கொள்கைகளை ஆய்வு செய்து உலக வங்கி இந்த பட்டியலை அறிவிக்கவில்லை என்று இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.,

0 comments :

Post a Comment

 
Toggle Footer