சிலாபம் முன்னேஸ்வரம் பத்தரகாளி அம்மன் கோயிலில் வருடாந்தம் நடைபெறும் மிருகபலி பூசை இம்முறை நடத்தப்பட மாட்டாது என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
முன்னேஸ்வரம் சிவன் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா, நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன், தீர்த்தோற்சவம், இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறுகின்றது.
சிவன் கோயில் மகோற்சவத்தோடு இணைந்ததாக, பத்ரகாளி அம்மன் ஆலயத்தின் மகோற்சவமும் நடைபெற்று வருகின்றது. இதன் தேர்த் திருவிழா, நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
பத்ரகாளி அம்மன் கோயிலின் வருடாந்த மகோற்சவம் நடைபெறுகின்ற போதிலும், காலாகாலமாக அக்கோயிலில் நடத்தப்பட்டு வந்த மிருகபலி பூசையை இம்முறை நடத்தப்போவதில்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் முன்னேஸ்வரம் பத்தரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெறும் மிருகபலி பூசைக்கு எதிரான நீதிமன்ற தடையுத்தரவுகளை சில அமைப்புக்கள் பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
Friday, September 16, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment