Saturday, September 24, 2016

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை புறக்கணிக்கத் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது கர்நாடக அரசு.

நேற்று கூடிய கர்நாடக அமைச்சரவைக்கு கூட்டத்தில் இன்று சட்டப்பேரவையைக் கூட்டி, தமிழகத்துக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறந்துவிட முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உள்ளது. இந்நிலையில் நேற்றே தமிழகத்துக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படை திறந்துவிட்டுக் கொண்டியுர்ந்த தண்ணீரை முழுவதுமாக நிறுத்தி  உள்ளது கர்நாடக அரசு. 

தமிழகத்தில் சம்பா சாகுபடிக்காக நேற்று முதல் ஒரு வாரத்திற்கு காவிரியில் வினாடிக்கு 6000 கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதை அவமதிக்கும் வகையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை ஒத்திவைப்பதென கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.. அதுமட்டுமின்றி, இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுப்பதற்காக கர்நாடக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நாளை நடத்தவும் கர்நாடக அமைச்சரவை தீர்மானித்திருக்கிறது. 

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை ஒத்திவைத்துள்ள கர்நாடக அரசு, நாளை கர்நாடக சட்டமன்றத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்போகிறது. பின்னர் இந்த வழக்கு வரும் 27 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கக் கூடாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அதை செயல்படுத்துவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை; அதனால் தான் தமிழகத்திற்கு நீர் திறக்க முடியவில்லை என கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer