Monday, August 29, 2016

ஓணம் பண்டிகை கொண்டாட சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது கேரள அரசு. வருகிற செப்டெம்பர் மாதம் 13ம் திகதி ஓணம் பண்டிகையை அம்மாநில மக்கள் வெகு விமர்சையாகக் கொண்டாட காத்து உள்ளனர்.இந்நிலையில், அரசு அலுவலக நேரங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. அதே சமயம் அரசு அலுவலகங்களில் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கான பொருட்கள் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதோடு அரசு அலுவலகங்களில் மலர்க்கோளங்கள் இடுவது போன்ற கொண்டாட்டங்கள் அறவே கூடாது என்றும் மாநில முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார். இதனால் அரசு பணிகள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன என்றும அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 மேலும் அலுவலக கோப்புகள்தான் முக்கியம் என்றும்,  அலுவலக பணிகளில் முழுமையாக ஈடுபடுமாறும் அரசு ஊழியர்களுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer