Tuesday, August 30, 2016

தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாலை மறியல்-ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அங்கங்கு பதற்றம் நிலவி வருகிறது.

காவேரி நதி நீரை தமிழகத்திற்கு பெற்று தரக்கோரியும், மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், முல்லை பெரியார், பாலாறு மீட்டு தாரக்கோரியும் தமிழகம் முழுவதும் விவசாயிகள், பல்வேறு அரசியல் கட்சியினர் சாலை மறியல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தி.மு.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். இதைப்போல் சென்னையில் செண்ட்ரல் ரயில் நிலையம், தாம்பரம்,  பல்லாவரம்போன்ற இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

போராட்டக்காரர்களிடையே போலீசார் குவிக்கப்பட்டு, விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து வருவதால், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும்சென்னையின் எழும்பூர், சென்டரல் உள்ளிட்ட இடங்களில் பதற்றம் நிலவி வருகிறது..

0 comments :

Post a Comment

 
Toggle Footer