Wednesday, August 31, 2016

செப்டெம்பர் மாதம் முழுவதும் வாக்காளர்கள் வரைவுப் பட்டியல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது என்று, தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் தங்களது பெயர்களை சரிப்பார்க்க,நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, புதிதாக பெயரை சேர்க்க என்று அனைத்து விதத்திலும் வரைவுப் பட்டியலைப் பயன்படுத்திக்கொள்ளும் படியாக வாக்காளர்கள் வரைவுப்  பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. இந்த வரைவுப் பட்டியலை வருகிற செப்டெம்பர் மாதம் 1ம் திகதி முதல் அதே மாதம் 30ம் திகதி வரை பொது மக்களின் பார்வைக்கு வைக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

இந்த வரைவுப் பட்டியல் கோட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வாக்குச் சாவடி மையம் அமைக்கப்படும் இடங்கள் என்று அனைத்து இடங்களிலும் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படும். 11ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மற்றும் 25ம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரு கிழமைகளில் வாக்காளர்கள் சிறப்பு முகாமும் நடைப்பெறும் என்றும், வருகிற ஜனவரி மாதம் 18 வயது நிரம்பும் எவரும் புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer