Monday, August 29, 2016

தமிழக அரசின் தான்தோன்றித் தனமான நடவடிக்கைகளை பார்க்கும்போது  “ஏ, தாழ்ந்த தமிழகமே!” என உரக்கக் குரல் கொடுக்க வேண்டும் போலத் தோன்றுகிறது என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழகத்தில் நடைப்பெறும் எந்தவிதமான பிரச்சனைகளுக்கும் இதுவரை அம்மையார் ஜெயலலிதா அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டாதது என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்படி கருணாநிதி பல்வேறு கேள்விகளை ஜெயலலிதாவுக்கு எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக மக்களின் எந்தப் பிரச்சினைக்காகவாவது  தமிழக ஆளுங்கட்சி, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களை அல்லது பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் கருத்தினை கேட்டறிந்திருக்கிறதா? மாநிலத்தைப் பாதித்திடும் மிக முக்கியப் பிரச்சினைகளில்  அனைத்துக் கட்சிகளையும்,  எல்லா பிரிவு மக்களையும்  அரவணைத்து  பொதுக் கருத்து - பொது நோக்கம் - பொதுப் பாதை உருவாக்கத் தவறிவிட்ட, ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமான இவர்களின் தான்தோன்றித்தனமான நடைமுறைகள் இருக்கின்றன. 

இந்த நடைமுறைகளை பற்றி நன்கு அறிந்த அண்டை மாநில மக்கள் மேகதாதுவில்  அணை கட்டுவோம், காவிரியில் தண்ணீர் தர மாட்டோம் என்று கர்நாடகமும், பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவோம் என்று ஆந்திராவும்,   சிறுவாணியில் அணை கட்டுவோம் என்று கேரளாவும் கூறுகிறார்கள்.  மொத்தத்தில்  பாழ்பட்டு வருவது தமிழகமும்,  பாதிக்கப்படுவது  தமிழ் மக்களும்தான்! 

ஆளும் அ.தி.மு.க. வினரோ  எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை ஆதாயம் என்று, எல்லாவற்றையும் அலட்சியப் படுத்தி ஒதுக்கி விட்டு, தங்களை வளப்படுத்திக் கொள்வதிலேயே நேரத்தையும், நினைப்பையும்  செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இதை எல்லாம் பார்க்கும் போது, அண்ணா வழியில் “ஏ, தாழ்ந்த தமிழகமே!” என உரக்கக் குரல் கொடுக்க வேண்டும் போலத் தோன்றுகிறது!.

0 comments :

Post a Comment

 
Toggle Footer