Monday, August 29, 2016

ரியூப் தமிழ் ஆதரவில் நாகர்கோயில் வேல்முருகன் ஆலய வீதியில் நேற்று வரலாறு காணாத மக்கள் கூட்டத்தினரிடையே ரியூப் தமிழ் ஆதரவில் நடாத்தப்பட்ட சூப்பசிங்கர் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.

சுமார் ஒரு கி.மீ நீளமான மைதானம் மக்களால் நிறைந்து வழிந்தது, கார்களை விடுவோர் இரண்டு கி.மீ தூரம் நடந்து வந்தார்கள்.

நாகர்கோவில் பகுதி வரலாற்றிலேயே இவ்வளவு பெருந்தொகை மக்கள் கூடியது கிடையாது என்று பலர் கூறுகிறார்கள்.

யாழ்.குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் சிறப்பு பேருந்துகள் பிடித்து வந்திருந்தார்கள்.

தாயகத்தில் ரியூப் தமிழ் பதித்துள்ள முக்கியமான காலடி இதுவாகும்.

முற்றிலும் இலவசமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும், அத்தருணம் கூடிய மக்கள் தொகையானது தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் போன்ற தோற்றத்தை தந்தது.

நாகர்கோயில் பகுதியில் இத்தகைய முயற்சியானது முற்றிலும் மாற்றமான புதிய கோணத்திலான சிந்தனை என்று பாராட்டப்பட்டுள்ளது.

ரியூப்தமிழ் இலங்கைப் பிரிவினர் நிகழ்ச்சியை மிகவும் திறம்பட நடத்தி பலரதும் பாராட்டைப் பெற்றனர், நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் ரியூப்தமிழ் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.










0 comments :

Post a Comment

 
Toggle Footer