Sunday, August 28, 2016

சென்னையில் நடைப்பெற்ற திரைப்பட விழா ஒன்றில்  இயக்குநர் சேரன் பேசும்போது, ‘சினிமாவில் இன்றைக்கு தயாரிப்பளர்களின் நிலைதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள். இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம்.. எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது’’ என இலங்கை தமிழர்கள் பக்கம் தாக்குதல் கணையை தொடுத்தார்.

இயக்குநர் சேரனின் இந்த பேச்சு இலங்கைத்தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரின் பேச்சுக்கு கண்டக்குரல்கள் எழுப்பி வந்தனர்.

இதையடுத்து தனது பேச்சு குறித்தும், கண்டனங்கள் குறித்தும் சேரன்,  ‘’ஒட்டுமொத்த இலங்கைத்தமிழர்களை நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு... நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத்தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும்.. அவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்கமாட்டார்கள்...’’என்று விளக்கம் அளித்தார்.

ஆனாலும் இந்த விவகாரம் மேலும் மேலும் கண்டனங்களை எழுப்பிவரும் நிலையில், லங்காஸ்ரீ இணையதளத்திற்கு  சேரன் அளித்துள்ள விளக்கம்:

’’நான் எந்த இடத்தில் பேசினேன் எந்த விசயத்திற்காக பேசினேன் என்பதை பொருத்து தான் அந்த கருத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு விழாவில் திருட்டு டிவிடி ஆதிக்கத்தை பற்றி நான் பேசும் போது இதனால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது . எங்கே எல்லாம் இருக்கு, தமிழகத்தில் இருக்கு; தமிழ் நாடு அரசாங்கம்  கண்டு கொள்ளாமல் இருக்கு.  காவல் துறையினர் அந்த வழியாக செல்கின்றனர். தமிழ் நாடு முழுவதும் 18000 கடைகள் இருக்கின்றன. இதை அனைத்தையும் சுட்டிக் காட்டினேன். அதே நேரத்தில் வெளி நாடுகளில் இருந்து படம் வெளியான அன்றே இணையத்தளத்தில் போட்டுவிடுகின்றனர். இதனால் உலகம் முழுவதும் இருக்க கூடிய தமிழர்கள் இலவசமாக பார்க்கும் அளவிற்கு மாறியுள்ளது.

இது யார் வெளியிடுவது என்று பார்க்கும் போது எங்களுக்கு வந்த தகவல் கொண்டு பார்க்கும் போது, யாரோ சில இலங்கை தமிழர்கள் ஏதோ ஒரு இடத்தில் இருந்து வேலையை செய்கின்றனர் என்று தகவல் கிடைத்துள்ளது.  இவை அல்லாமல் எனக்கு ஒரு அனுபவம்.  சிடூஎச் ஆரம்பித்து லண்டனில் குடும்ப நண்பர்கள் 300, 400 நண்பர்கள் இருக்கிறார்கள். அனைவரும் என்னேட சகோதரார்கள் இலங்கை தமிழர்கள்.  அவர்கள் யாவரும் என்னை ஏன் சேரன் சார் இப்படி பேசி இருக்கிறீர்கள் என்று கேட்க வில்லை. ஏன் என்றால் அவர்கள் அனைவருக்கும் என்னை பற்றி நன்றாக தெரியும் அனைவரும் பழகி இருக்கிறார்கள்.

இந்த கருத்தை பற்றி முரண்பாடக எடுத்து கொண்டவர்கள் என்னை பற்றி தெரியாதவர்கள் பழகாதவர்கள், நான் உங்கள் போராட்டத்திற்கு இவ்வளவு செஞ்சி இருக்கோம், அப்போழுது சிலர் இவர் அப்படி என்ன போராடி இருக்காரு என்று அவர்களுடைய விமர்சனத்தை பதிவு செய்கின்றனர். அதற்கு நீங்கள் போராடிய அளவிற்கு நான் போராட வில்லை. நான் ஒரு சாதாரன மனிதன்.  ஆனால் என் தற்காப்பு வாழ்க்கையில் என் படத்தை நம்பிதான் நான், சினிமாவை நம்பிதான் நான், சினிமா பாதிக்கும் போது எந்த இடத்தில் பாதிக்கப்படுகிறது என்று கண்டறிந்து அதை நீக்குவதற்கு முயற்சி எடுக்கிறேன்.

இந்த பிரச்சனைக்கு இலங்கை தமிழர்கள் காரணமாக இருக்கிறார்கள் என்று சொன்னதும், உலகம் முழுவதும் விமர்சனங்கள் வெடிக்கிறது. 15 வருடமாக போராடி கொண்டு இருக்கிறார்கள். இதனை எந்த ஒரு அமைப்பும் கேட்கவில்லை. நம்முடைய தோழர்கள் நம்முடைய தமிழர்கள், சகோதரர்கள் இந்த தொழிலை பண்ணாதீர்கள் முறையாக அனுமதி வாங்கி பண்ணுங்கள் என்று எந்த அமைப்பாவது இவ்வாறு குரல் கொடுத்து இருக்கிறதா.

இவ்வாறு குரல் கொடுக்காதவர்கள், இந்த ஒரு குறையை குற்றச்சாட்டாக கொண்டு உடனே ஆர்ப்பரிக்கிறார்களே, இதில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு இதே போல் ஆதங்கம் இருக்கும் என்பதற்காகவே நான் பதிவு செய்தேன். என்னுடைய ஆதங்கம் யாரையும் குறை சொல்வதற்காக அல்ல. ஆனால் நான் உங்கள் மீது நம்பிக்கை வைத்து உள்ளேன்; சகோதரன் நினைத்துள்ளேன், தமிழ் நாட்டில் அரசியல் பெரும் கட்சிகளை எதிர்த்து கொண்டு தான் நானும், சீமானும் சேர்ந்து போராடினோம்.  அனைவரின் மீது உள்ள அன்பில் தான் செய்தோம். நீ என் சகோதரன் நீயே ஏன்டா என் முதுகில் குத்துகிறாய் என்று கேட்டேன். யாருமே என் படங்களை லண்டன், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியாவிலும் திருட்டு தனமாக விற்கவில்லை என்று சொல்லுங்கள் திருட்டு டிவிடி யை பார்க்கவில்லை என்று சொல்லுங்கள்.

நான் என்னுடைய பொருளை விலை கொடுத்து கொடுக்க அனுமதிக்கிறேன். அதே போன்று அதே போல விலை கொடுத்து வாங்க தயாராக இருக்கிறேன். அது தானே என் பிள்ளைகளுக்கு கற்று கொடுக்கும் கல்வி, அப்போழுது என் சகோதரன் இவ்வாறு இருப்பது இன்று நினைப்பது தவறா, நான் கேட்பது யாரோ ஒரு திருடனுக்காக அல்ல; இது என் குடும்பம், குடும்பத்தில் தவறு நடக்கும் பொழுது அப்படி செய்ய கூடாது, அதை சரி பண்ணுங்க என்று சொல்கிறேன். அதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா நீங்கள்.

எனக்கு தெரிந்த அமைப்புகளில் இருந்து எனக்கு தெரிந்த நண்பர்களில் இருந்து யாவரும் இவை பற்றி பேசவில்லை. இது பற்றி பேசியவர்கள் நம்மை வேண்டாம் என்று நினைக்கிறவர்கள் இவற்றை பற்றி பேசுகின்றனர். ஈழத்தமிழர்கள் பற்றி யூடியூபில் மூன்று வீடியோ இருக்கிறது. அந்த  மூன்று வீடியோ போட்டு கேளுங்கள்.  அந்த மாதிரி பேசிய மனிதன் ஏன் இன்று இப்படி பேசி இருக்காரு என்று சின்ன கேள்வி உங்கள் மனதில் உருவாகும். இப்போது இப்படி பேசி உள்ளேன் என்றால் எவ்வளவு காயம் பட்டு இருப்பேன்.

நேற்று செய்தது அனைத்தையும் மறந்து விட்டு இன்று ஏய் நீ எப்படி செய்யலாம் என்று ஒரு எதிப்பு குரலை எழுப்புகிறார்கள் என்றால் நம்முடைய எதிரிகள், நமக்கு பிடிக்காதவர்கள்.  இதனால் எனக்கு வருத்தம் கிடையாது. எனக்கு என்ன ஆதங்கம் என்றால் உலகம் முழுக்க எனக்குனு ஒரு நாடு இல்லை, நமக்குனு ஒரு மண் இல்லை, நாம் ஒரு அடையாளத்தை அகதி என்று வைத்து கொண்டு அலைகிறோம் ஏன் என்றால் நாம் தேசத்தை விட்டு துரத்தப்பட்டதால், தேசத்தில் நாம் நிம்மதியாக வாழ முடியாததால், அந்த அகதிகள் என்ற பெயர் நமக்கு ஒரு அழுக்காகவும் ஒரு கஷ்டமாகவும் இருக்கிறது.

ஒருத்தன் இந்தியன் என்கிறான் ஒருத்தன் அஸ்திரோலியா என்கிறான் ஒருத்தன் அமெரிக்கா என்றான் ஆனால் நான் யாரு என்று சொன்னால் எனக்கு நாடு இல்லை எனக்கான ஒரு வீடு இல்லை. இந்த இடத்தில் நான் வாழுகின்ற வாழ்க்கை என்னும் அடையாளப் படுத்த வேண்டும்.  மேம்போக்காக, மேல் மட்டத்திற்கு கொண்டு போக வேண்டும். வாழ்க்கை ஒரு உதாரணமாக இருக்கவேண்டும்.  அதை விட்டு அடுத்தவர்களுடைய பொருளை திருடி பிழைகின்ற நாம் அடையாளம் அதை துரத்தவேண்டும் என்று தான் என்னை தூக்கி வேண்டும் என்றால் எறிந்து விடுங்கள். என்னுடைய படம் பார்க்க மாட்டீர்களா பார்க்கவேண்டாம்.  நான் இறந்தால் வர மாட்டீர்களா வர வேண்டாம். ஆனால் உன்னுடைய சகோதரன் இப்படி எல்லாம் செத்துகிட்டு இருக்கிறான் என்பது உணர்ந்தால் போதும்.  உணர வக்கவேண்டும் அதே நேரத்தில் உண் அடையாளம் இது இல்லை நீ நேர்மையானவன். நல்ல குடியில் பிறந்தவன்.  இதற்கு மேல் நான் தமிழர்களை பற்றி இலங்கை தமிழர்களை பற்றி மக்களை பற்றி  பேசவே மாட்டேன்.  அதே நேரத்தில் ஒரு வேண்டுகோள்..... நான் இறந்தால் கூட யாரும் செய்தி போட கூடாது’’ என்றார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer